பெற்றோரை சுட்டுக்கொன்றுவிட்டு - மகன் தற்கொலை! - மூன்று சடலங்கள் மீட்பு!!
2 மாசி 2025 ஞாயிறு 11:43 | பார்வைகள் : 6928
வீடொன்றில் இருந்து மூவரது சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் துப்பாக்கிச்சூட்டில் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்சின் வடகிழக்கு எல்லை மாவட்டமான Moselle
இல் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. அங்குள்ள Retonfey எனும் சிறு கிராமத்தில் வசிக்கும் 73 வயதுடைய தாய் மற்றும் அதே வயதுடைய தந்தையை அவர்களது மகன் சுட்டுக்கொன்றுள்ளார். காவல்துறையில் பணிபுரியும் 46 வயதுடைய மகன், இருவரையும் சுட்டுக்கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
முதியவர்களை பராமரிக்கும் தாதி ஒருவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, சடலங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, காவல்துறையினரை அழைத்துள்ளார். கொல்லப்பட்ட பெண் நீண்டகாலமாக நோயுடன் அவதியுற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan