தரையில் படுத்துறங்கும் கைதிகள்.... வெளியே காத்திருக்கும் 20,000 பேர்! - திணறும் சிறைச்சாலைகள்!!
1 மாசி 2025 சனி 10:19 | பார்வைகள் : 8206
பிரான்சில் சிறைவைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளின் எண்ணிக்கை தொடர்பில் ஒவ்வொரு மாதமும் அறிக்கை வெளியிடப்படுவது அறிந்ததே. டிசம்பர் 1 ஆம் திகதியோடு ஒப்பிடுகையில் ஜனவரி 1 ஆம் திகதி கைதிகளின் எண்ணிக்கை சிறிதளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் கைதிகளின் எண்ணிக்கை 80,000 இற்கும் அதிகமாகவே காணப்படுகிறது. டிசம்பர் 1 ஆம் திகதியின் நிலவரப்படி 80,792 கைதிகள் சிறைவைக்கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை ஜனவரி 1 ஆம் திகதி0 80,669 ஆக குறைவடைந்துள்ளது.
பிரான்சில் 61,000 வரையான அகதிகளுக்கான இடங்கள் மாத்திரமே உள்ளன. தற்போதுள்ள கைதிகளின் எண்ணிக்கை 129.3% சதவீதமாக உள்ளது.
16 சிறைச்சாலைகளில் அதன் அளவை விட 200% சதவீதம் அதிக கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும், 4,310 கைதிகள் மெத்தைகளை தரையில் போட்டு உறங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இன்னும் 20,779 பேர் தங்களுக்கான சிறைத்தண்டனைக்காக வெளியே காத்திருக்கின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan