மாவை சேனாதிராஜாவின் மறைவு - பலர் இரங்கல்
30 தை 2025 வியாழன் 06:55 | பார்வைகள் : 12233
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் நேற்று அவர் காலமானார்.
கடந்த இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் உட்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து முன்நின்று, பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பிய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் சிரேஷ்ட தலைவருமான மாவை சேனாதிராஜா அவர்களின் திடீர் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என சஜித் பிரேமதாஸ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan