முதலாம் உலகப்போரில் இறந்த முதல் பிரெஞ்சு வீரர்!!
1 பங்குனி 2018 வியாழன் 11:30 | பார்வைகள் : 22653
முதலாம் உலகப்போர் விட்டுச்சென்றது அழிவுகளும் நினைவுகளும் மட்டும் தான். முதல் 300 நாட்களில் Verdun இல் இடம்பெற்ற யுத்தத்தில் மட்டும் 300,000 ஆண்கள் கொல்லப்பட்டனர்.
உலகப்போர் என்ற ஒன்றை உலகம் முன்னெப்போதும் கண்டிராத போது, பிரெஞ்சு இராணுவ வீரர்கள் யுத்தத்துக்கு தயாரானார்கள். நாட்டை காப்பது ஒன்றே பணி என காலை முன் வைத்த வீரர்களில்.. முதலில் பலியான உயிர், Sergeant Claude Fournier எனும் வீரருடையது.
பிரெஞ்சு - ஜெர்மன் வீரர்களுக்கு இடையே இடம்பெற்ற யுத்தத்தின் தடயங்களை ஆராய்ச்சியாளர்கள், தொல்லியல் நிபுணர்கள், தடவியல் நிபுணர்கள் என பலர் பல ஆண்டுகளாக ஆராய்ந்து வந்தனர்.
2015 ஆம் ஆண்டு மே மாதம் முதன் முதலாக Fournier இன் தடயங்களை கண்டு பிடித்தனர். DNA நிபுணர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான ஆராய்ச்சியில் இவரே முதன் முதலாக கொல்லப்பட்ட வீரர் என கண்டுபிடிக்கப்பட்டது.
முழங்காலை முட்டும் 'ஹோப்லி' சப்பாத்து, துப்பாக்கி, தலைக்கவசம், தண்ணீர் போத்தல், துப்பாக்கி குண்டு என இவர் பயன்படுத்திய பல பொருட்களை ஆராய்ந்தே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
Fournier, ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி, 1916 ஆம் ஆண்டு கொல்லப்பட்டுள்ளார். தன்னுடைய 35 வது வயதில் இறந்த இவர், நவம்பர் 27, 1880 ஆம் ஆண்டு Verdun இன் தெற்கு பகுதியில் பிறந்துள்ளார்.
வித்தியாசமான தகவல் தான் இல்லையா? பிரெஞ்சு அரசு இவருக்கு மரியாதை செய்யும் முகமாக நினைவு துதி ஒன்றை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan