பாகிஸ்தானின் எரிவாயு டேங்கர் லொறி வெடித்துச் சிதறியதில் 6 பேர் பலி…..
28 தை 2025 செவ்வாய் 12:30 | பார்வைகள் : 4371
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் எரிவாயு டேங்கர் லொறி வெடித்துச் சிதறியதில், சிறுமி உட்பட 6 பேர் பலியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாகாணம் முல்தானின் ஹமீத் புர் கனோரா பகுதியில் எரிவாயு டேங்கர் லொறி ஒன்று வெடித்துச் சிதறியது.
இதில் அருகில் உள்ள குடியிருப்புகள் பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. குண்டு வெடிப்பு போல் பயங்கர சத்தத்துடன் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் 5 பேர் இந்த விபத்தில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், சேதமடிந்த வீடு ஒன்றில் மற்றொரு உடல் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
இறந்தவர்களில் ஒரு சிறுமி மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவர் என அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
மேலும் 20 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்ததாகவும், 70 வீடுகள் பகுதியளவு சேதமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், காயமடைந்தவர்களில் 13 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
நகர காவல்துறை அதிகாரி இந்த வெடிவிபத்து குறித்து கூறுகையில், தொழில்துறை எஸ்டேட்டில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரியின் வால்வுகளில் ஒன்றில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டது.
டேங்கர் வெடிப்பதற்கு முன்பு எரிவாயுவின் வாசனையை உணர்ந்ததால், அப்பகுதியினர் சிலர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டனர் என தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan