விமானம் மூலம் ஈஃபிள் கோபுரத்தை தகர்க்க திட்டம் தீட்டிய பயங்கரவாதிகள்!!
4 பங்குனி 2018 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 21755
விமான சேவைகள் ஆரம்பித்த காலத்தில் இருந்து விமான விபத்துக்களும், விமானங்களை கடத்துவதும் என துன்பங்களும் தொடரத்தான் செய்கின்றன...
பயங்கரவாதிகள் ஒருதடவை எயார் பிரான்ஸ் விமானம் ஒன்றை கடத்தி, ஈஃபிள் கோபுரத்தை தகர்க்க திட்டம் தீட்டினார்கள்.
டிசம்பர் 4, 1994 ஆம் ஆண்டு. எயார் பிரான்சின் 8969 விமானம். அல்ஜீரியாவின் தலைநகரான Algiers நகரில் உள்ள Houari Boumedienne விமான நிலையத்தில் புறப்படத் தயாராக நின்றது.
குறித்த விமானத்தை கடத்தும் முயற்சியில் விமான நிலையத்துக்குள் ஆயுதத்துடன் நான்கு பயங்கரவாதிகள் நுழைந்தனர். பரிசுக்கு செல்லும் விமானத்தை கடத்தி, பயணிகளுடன் சென்று ஈஃபிள் கோபுரத்தில் மோதி தகர்க்கச் செய்வதே அவர்கள் திட்டம்.
பயங்கரவாதிகளில் இருவர் விமானத்துக்குள் ஏறியதும், விஷயம் பரபரப்பானது. பயங்கரவாதிகள் விமான நிலையத்தை கைப்பற்றியதாக தகவல் பிரெஞ்சு அதிரடிப்படையான GIGN க்கு தகவல் வந்தது.
விமானநிலையத்தில் இரு பயங்கரவாதிகளுக்கும் GIGN படையினருக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கி மோதலில் இரு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
விமானத்துக்குள் இருந்த இரு பயங்கரவாதிகள், 229 பயணிகளை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.
அதிரடியைத் தொடர்ந்த GIGN படையினர், அடுத்த 20 நிமிடங்களில் இரு பயங்கரவாதிகளையும் விமானத்துக்குள் வைத்து சுட்டு கொன்றனர்.
பயங்கரவாதிகளின் திட்டம் தகர்க்கப்பட்டது. ஈஃபிள் கோபுரம் காப்பாற்றப்பட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan