மீண்டும் தொலைபேசிக்காக கத்திக்குத்து... - மூவர் கைது!!
27 தை 2025 திங்கள் 14:42 | பார்வைகள் : 10877
தொலைபேசிக்காக 17 வயதுடைய சிறுவன் ஒருவன் கொல்லப்பட்ட பரபரப்பு அடங்கும் முன்னர், மற்றுமொரு தாக்குதல் 'தொலைபேசிக்காக' இடம்பெற்றுள்ளது.
Évry-Courcouronnes (Essonne) நகரில் இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளது. 19 வயதுடைய ஒருவரை மூன்று நபர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். கத்தியினால் குத்தப்பட்டதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
தாக்குதல் மேற்கொண்ட மூவர் கொண்ட குழுவை காவல்துறையினர் உடனடியாக கைது செய்துள்ளனர். தொலைபேசியை கொள்ளையிடுவதற்காக இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பரிசில் Elias எனும் 14 வயதுடைய சிறுவன் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan