கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய நிர்*வாண நபர்

3 பங்குனி 2025 திங்கள் 06:53 | பார்வைகள் : 10460
கொழும்பில் இருந்து கண்டி நோக்கி நிர்*வாணமாக உந்துருளியில் பயணித்த ஒருவர் கடுகன்னாவ காவல்துறையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய அஹங்கம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கண்டி-கொழும்பு வீதியில் உந்துருளியில் பயணித்த இந்த நபரை காவல்துறை உத்தியோகத்தர்கள் கண்காணித்து பிடிக்க முற்பட்ட போதிலும் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடுகன்னாவ மற்றும் பேராதனை காவல்துறைக்கு தகவல் வழங்கியதையடுத்து வீதித் தடைகளைப் பயன்படுத்தி இந்த உந்துருளியை நிறுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடுகன்னாவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1