Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மீண்டும் எரிபொருள் வரிசை

இலங்கையில் மீண்டும் எரிபொருள் வரிசை

28 மாசி 2025 வெள்ளி 17:00 | பார்வைகள் : 3883


இலங்கையின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாரிய வாகன வரிசைகள் அதிகரித்துள்ளன.

எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருட்களை விநியோகிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் இவ்வாறு வாகன வரிசைகள் அதிகரித்துள்ளன.

இன்று நள்ளிரவு முதல், எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எரிபொருள் கொள்வனவு கட்டளை செய்யும் நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், எரிபொருள் நிரப்புவதற்கு மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாரிய வாகன வரிசைகளில் காத்திருக்கின்றனர். 

இதேவேளை நாட்டில் எ‌ரிபொரு‌ள் பற்றாக்குறை இல்லை என்றும், எ‌ரிபொரு‌ள் விநியோகம் சீராக உள்ளது என்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்

வர்த்தக‌ விளம்பரங்கள்