ஐந்துமணிநேரம் தாமதமாக வந்தடைந்த Eurostar..!

27 மார்கழி 2024 வெள்ளி 15:02 | பார்வைகள் : 8911
இலண்டன் நகரில் இருந்து பரிசை நோக்கி வந்த Eurostar தொடருந்து ஒன்று, ஐந்து மணிநேரம் தாமதமாக வந்தடைந்தது.
Train 9080 இலக்க தொடருந்து காலை 6.01 மணிக்கு இலண்டனில் இருந்து புறப்பட்டது. Gare du Nord (Paris) நிலையத்தினை காலை 9.20 மணிக்கு வந்தடைய வேண்டிய தொடருந்து, பிற்பகல் 2.20 மணிக்கே வந்தடைந்தது. இதனால் பலநூறு பயணிகள் தொடருந்துக்குள் காத்திருக்க நேர்ந்தது.
பா-து-கலே அருகே தொடருந்து மெதுவாக பயணித்து, பின்னர் இயங்க முடியாமல் தரிந்து நின்றது. பின்னர் மற்றொரு Eurostar தொடருந்தில் பயணிகள் ஏற்றபட்டு பரிசுக்கு அழைத்துவரப்பட்டனர்.
தொடருந்து நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1