Chèque énergie கொடுப்பனவுகள் பெற்றுக்கொள்ள - இன்னும் சிலநாட்களே உள்ளன!
26 மார்கழி 2024 வியாழன் 16:16 | பார்வைகள் : 9700
2024 ஆம் ஆண்டுக்கான Chèque énergie கொடுப்பனவுகளை இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்கள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அதனை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்தின் ஏப்ரல் மாதம் முதல் இந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எரிவாயு, எரிபொருள், மின்சாரம் போன்றவற்றுக்கான இழப்பீடாக இந்த கொடுப்பனவுகள் 48 யூரோக்கள் முதல் 277 யூரோக்கள் வரை (குடும்ப வருமானத்தை அடிப்படையாக கொண்டு) வழங்கப்பட்டு வருகிறது. இந்த கொடுப்பனவுகளை பெற ஒரு மில்லியன் பேர் ஏற்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை ஒரு இலட்சம் பேர் வரை மட்டுமே கொடுப்பனவுகளை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
900,000 பேர் இதுவரை இந்த கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளவில்லை எனவும், டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அதனை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், கால எல்லையை நீடிப்பது தொடர்பில் என முடிவும் எட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan