சீரற்ற காலநிலை தொடர்கிறது.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
25 தை 2025 சனி 08:00 | பார்வைகள் : 5016
ஜனவரி 25, இன்று சனிக்கிழமை நாட்டின் பல மாவட்டங்களில் சீரற்ற காலநிலை நிலவ உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
வேகமான காற்று, மழை மற்றும் வெள்ளம் காரணமாக 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Calvados மற்றும் Ille-et-Vilaine ஆகிய இரு மாவட்டங்களுக்கும் வெள்ளம் காரணமாக 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, Aisne, Ardennes, Côtes d'Armor, Eure, Eure-et-Loir, Maine-et-Loire, Manche, Marne, Mayenne, Morbihan, Nord, Oise, Orne, Sarthe, Seine-Maritime, Yvelines, Somme மற்றும் Val-D'Oise ஆகிய மாவட்டங்களில் மழை, வேகமான காற்று மற்றும் வெள்ளம் காரணமாக 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் மணிக்கு 90 கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan