"Donald Trump அவர்களின் தேசபக்தி எனக்கு பிடிக்கும்" Jordan Bardella
20 தை 2025 திங்கள் 10:02 | பார்வைகள் : 15019
அமெரிக்காவின் 47 வது அதிபராக இன்று மாலை பதவியேற்க்கவுள்ள Donald Trump அவர்களின் தேசபக்தி தனக்கு பிடிக்கும் என தீவிர வலதுசாரி கட்சியான Rassemblement national
கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் Jordan Bardella தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
"தனது நாட்டை, நாட்டு மக்களை, நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமே முதன்மையாக நேசிக்கும் அவரின் தேசபக்தி எனக்கு பிடிக்கும்" என தெரிவித்துள்ள Jordan Bardella அவர்கள், Donald Trump அவர்களின் அடுத்த ஐந்தாண்டு ஆட்சி அமெரிக்காவிற்கு சிறந்தது என்றும் ஆனால் பிரான்ஸ், ஐரோப்பாவிற்கு அவரின் தெரிவு சிறந்தது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டவர்களை மறுத்து தனது நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிக்கும் அவரது ஆட்சியை பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகள் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan