சார்லி-எப்தோ மாநாட்டுக்குள் ஆயுதத்துன் நுழைய முற்பட்ட ஒருவர் கைது!!
19 தை 2025 ஞாயிறு 09:47 | பார்வைகள் : 7385
சார்லி-எப்தோ பத்திரிகை மாநாட்டுக்குள் ஆயுதத்துடன் நுழைய முற்பட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
துலு (Toulouse) நகரில் இச்சம்பவம் நேற்று முன்தினம் ஜனவரி 17, வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சார்லி=எப்தோ பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி பத்து ஆண்டுகள் நிறைடவைந்ததி அடுத்து, அந்த தாக்குதல் தொடர்பான சில முக்கிய கலந்துரையாடல்களுக்காக இந்த மாநாடு அன்றைய தினம் அங்கு இடம்பெற்றது. அதில் 58 வயதுடைய ஒருவர் ஆயுதத்துடன் நுழைய முற்பட்டதாகவும், அவரை காவலாளி தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவரிடம் இருந்த ஆயுதம், ஒரு பிஸ்டல் வகை கைத்துப்பாக்கி எனவும், அதில் குண்டுகள் எதுவும் இல்லை எனவும், அச்சுறுத்தல் விடுக்கும் நோக்கில் அவர் அதனை எடுத்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக அவர் கைது செய்யப்பட்டதுடன், அவரது வீடும் சோதனையிடப்பட்டது. இதேபோன்று குண்டுகள் அற்ற ஏழு பிஸ்டல்கள் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக Toulouse நகர காவல்துறையினர் தெரிவித்தனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan