Paristamil Navigation Paristamil advert login

மன்னார் நீதிமன்றம் முன் துப்பாக்கி சூடு - இருவர் உயிரிழப்பு

மன்னார் நீதிமன்றம் முன் துப்பாக்கி சூடு - இருவர் உயிரிழப்பு

16 தை 2025 வியாழன் 06:32 | பார்வைகள் : 4023


மன்னார் நீதிமன்றம் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மன்னார், உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியின் போது ஏற்பட்ட தர்க்கத்தை தொடர்ந்து ஜூன் மாதம் 10ஆம் திகதி சகோதரர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். 

 குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணைக்காக இன்றைய தினம் வியாழக்கிழமை வருகை தந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நீதிமன்ற முன்றலில் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் ஏனைய இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 குறித்த சம்பவத்தால் நீதிமன்ற சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்