கொழும்பில் 12ஆவது மாடியில் இருந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு
11 தை 2025 சனி 10:04 | பார்வைகள் : 5586
பொரளையில் உள்ள 24 மாடி குடியிருப்பின் 12 ஆவது மாடியில் இருந்து நேற்று (10) இரவு 16 வயது சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்தில் படுகாயமடைந்த சிறுமி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பொரளை, சர்பன்டைன் வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சிறுமி குறித்த மாடியில் இருந்து குதித்தாரா அல்லது விழுந்தாரா என்பதை அறிய பொரளை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan