ஒரு எமனும் ஒரு விமானமும்! - ஒரு பகீர் வரலாறு!!
17 வைகாசி 2018 வியாழன் 13:30 | பார்வைகள் : 21781
அமெரிக்காவின் பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் McDonnell Douglas. உருவத்தில் இராட்சத விமானங்களும், தொழில்நுட்பத்தில் உச்சக்கட்டமுமாகவும் கொண்ட விமானங்கள் தயாரிப்பதில் முன்னோடி. ஆனால் அது அமெரிக்காவின் வரலாறு... பிரெஞ்சு தேசத்துக்கு என ஒரு கதை உண்டு.
அது மேற்படி நிறுவனம் தயாரித்த DC-10 எனும் மூன்று இஞ்சின்கள் கொண்ட இராட்சத விமானம்.
இன்றைக்கு 47 வருடங்களுக்கு முன்னர் இந்த விமானம் முதல் தடவை வானில் பறந்தது. 380 பயணிகள் அமரக்கூடிய இந்த விமானம், மிக நீண்ட மணிநேரங்கள் பயணிக்கக்கூடிய விமானம் ஆகும்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள், இந்த விமானத்துக்கு என ஒரு எமன் உண்டு. ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த எமன் அது.
இந்த விமானத்தில் பயணிகள் கொண்டுவரும் பொருட்களை (லக்கேஜ்) ஏற்ற ஒரு கதவு உண்டு. 'எயார் லொக்' எனப்படும் மிக பாதுகாப்பான, தொழில்நுட்பம் வாய்ந்த கதவு அது. அந்த கதவு தான் இந்த விமானத்தின் எமன்.
இந்த விமானம் இதுவரை 55 தடவைகள் விபத்துக்குள்ளாகியுள்ளன. அதில் 32 விபத்துக்கள் நீண்ட தூர பயணத்தின் போது ஏற்பட்ட விபத்து..!
இதுவரை இந்த ரக விமானத்தின் மூலம் 1,261 பேர்கள் இறந்திருக்கிறார்கள்... நம்ப முடிகிறதா..??
இருக்கட்டும், இதற்கும் பிரெஞ்சு புதினத்துக்கும் என்ன தொடர்பு...?? தொடர்பு உள்ளது.
அதோ, ஓர்லி விமான நிலையத்தில் இருந்து 346 பயணிகளுடன் புறப்பட தயாராக இருக்கும் DC-10 விமானத்தின் அந்த கதவு சரியாக மூடப்படவில்லை..!
நாளை..!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan