Choisy-le-Roi : காவல்துறையினர் மீது துப்பாக்கிச்சூட்டு... மூவர் கைது!
27 கார்த்திகை 2024 புதன் 10:21 | பார்வைகள் : 7781
போதைபொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய முற்பட்டபோது, அவர்கள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். Choisy-le-Roi (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
Kremlin-Bicêtre மற்றும் Choisy-le-Roi நகரங்களைச் சேர்ந்த காவல்துறையினர், நேற்றுமாலை Rue Constant-Coquelin வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதன்போது சந்தேகத்துக்கு இடமான வாகனம் ஒன்றை அவர்கள் சோதனையிட முற்பட்டனர்.
அதை அடுத்து, மகிழுந்துக்குள் இருந்தவர்கள் கைத்துப்பாக்கி ஒன்றை நீட்டி, காவல்துறையினரை நோக்கிச் சுட்டனர். இச்சம்பவத்தில் காவல்துறையினர் காயமடையவில்லை.
பின்னர் மகிழுந்துக்குள் இருந்த மூவர் தப்பிச் செல்ல முற்பட்ட போது காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan