இலங்கை தொடர்பில் IMF எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
23 கார்த்திகை 2024 சனி 16:34 | பார்வைகள் : 5314
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான வேலைத்திட்டத்தின் 3ஆவது மீளாய்வில் அதன் பிரதிநிதிகளும் இலங்கை அதிகாரிகளும் ஊழியர் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் இன்று (23) அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவமும் அதன் நிறைவேற்று சபையும் இதனை அங்கீகரித்ததன் பின்னர் இலங்கைக்கு சுமார் 333 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
கொள்கைகளை தொடர்ச்சியாக பராமரிக்க புதிய அரசாங்கம் காட்டும் அர்ப்பணிப்பு, திட்டத்தின் நோக்கங்களை அடைய முக்கியமானது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவிற்கு பீட்டர் ப்ரூவர் தலைமை தாங்கிய நிலையில், அவர்கள் நவம்பர் 17 முதல் இந்த நாட்டில் தங்கியிருந்தனர்.
2023 மார்ச் 20 ஆம் திகதி, இலங்கைக்கான $2.9 பில்லியன் கடன் வசதியை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்திருந்தது. இது 48 மாதங்களில் செயற்படுத்தப்படும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan