நேட்டோவுடன் அவசர பேச்சுவார்த்தைக்கு தயாராகும் பிரபல ஐரோப்பிய நாடு
23 கார்த்திகை 2024 சனி 15:27 | பார்வைகள் : 7700
புடின் விடுத்த எச்சரிக்கையையும் மீறி உக்ரைன் அமெரிக்க ஏவுகணைகளை ரஷ்யாவிற்குள் ஏவியது.
ரஷ்யா உக்ரைன் நகரம் ஒன்றின்மீது Oreshnik வகை ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்றை வீசியது.
ஆக, போர்ச்சூழல் மும்முரமாகிவரும் நிலையில், நேட்டோவுடனான பேச்சுவார்த்தைக்கு சில நாடுகள் தயாராகி வருகின்றன.
போர் தொடர்பில் ஏற்கனவே உக்ரைன் நேட்டோவுடன் அவசர பேச்சுவார்த்தைக்கு தயாராகிவரும் நிலையில், தற்போது பிரித்தானியாவும் நேட்டோவுடன் அவசர பேச்சுவார்த்தைக்கு தயாராகிவருகிறது.
உக்ரைனிலுள்ள Dnipro என்னும் நகரம் மீது Oreshnik வகை ஏவுகணை ஒன்றை வீசிய புடின், காற்றைவிட வேகமாக பயணிக்கக்கூடிய அந்த ஏவுகணை உலகில் வேறு யாரிடமும் இல்லை என்றும், அதை எதிர்கொள்ளும் சக்தி எதற்கும் இல்லை என்றும் புடின் கூறியுள்ளார்.
அத்துடன், அந்த வகை ஏவுகணைகள் பலவற்றை உருவாக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
மேலும், அவர் அந்த ஏவுகணைகளில் சாதாரண வகை குண்டுகளையே பொருத்தியிருந்ததாகவும், தான் அதில் அணு ஆயுதங்களைப் பொருத்தியிருந்தால் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும் என்றும் எச்சரித்திருந்தார்.
புடின் கூறுவதுபோலவே, Oreshnik வகை ஏவுகணைகளில் அணு ஆயுதங்களை பொருத்தி தாக்குவது சாத்தியமே என பென்டகனும் தெரிவித்துள்ளது.
ஆகவேதான், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில், உக்ரைன், பிரித்தானியா முதலான நாடுகள் நேட்டோ அமைப்புடன் அவசர பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan