● நாளை போக்குவரத்து தடை.. முழு விபரங்கள்!!
20 கார்த்திகை 2024 புதன் 06:45 | பார்வைகள் : 7947
தொடருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதை அடுத்து, நாளை நவம்பர் 21, வியாழக்கிழமை போக்குவரத்துக்கள் தடைப்பட உள்ளன.
TGV Inoui மற்றும் Ouigo சேவைகள் சில தாமதங்களைச் சந்தித்தாலும், கிட்டத்தட்ட வழமை போல் இயங்கும் என SNCF அறிவித்துள்ளது.
Intercités சேவைகள் இரண்டில் ஒன்று இயங்கும்.
TER பிராந்திய சேவைகள் பத்தில் ஏழு சேவைகள் இயங்கும்.
இல் து பிரான்சுக்குள் குறிப்பிடத்தக்க அளவு போக்குவரத்து தடை ஏற்பட உள்ளது.
RER A சேவையும், Transilien K, L மற்றும் P ஆகிய சேவைகளும், ட்ராம்களில் T4, T11, T12 மற்றும் T13 ஆகிய சேவைகளும் தடையின்றி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
RER E சேவைகள் நான்கில் மூன்று இயங்கும் எனவும், RER C சேவைகள் மூன்றில் இரண்டு இயங்கும் எனவும்,
RER B சேவைகளில் இரண்டில் ஒன்று மட்டுமே இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RER D சேவைகள் மூன்றில் ஒன்று இயக்கப்படும்.
***
பயணிகள் இது தொடர்பில் அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan