வெள்ளம் : 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
19 கார்த்திகை 2024 செவ்வாய் 19:17 | பார்வைகள் : 8590
வெள்ள அனர்த்தம் (crues) காரணமாக நாளை நவம்பர் 20 புதன்கிழமை நாட்டின் 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது. அதை அடுத்து பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
Ardennes, Côte-d'Or, Doubs, Eure, Marne, Meurthe-et-Moselle, Meuse, Moselle, Nord, Oise, Pas-de-Calais, Puy-de-Dôme, Haute-Saône, Seine-Maritime, Yvelines, Vosges, Yonne, Territoire de Belfort மற்றும் Val-d'Oise ஆகிய 18 மாவட்டங்களுக்கு நாளை காலை முதல் ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
வழக்கமான செயற்பாடுகள் பாதிப்படையும் எனவும், போக்குவரத்துக்கள் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan