கேலிச்சித்திர போட்டிக்கு சர்வதேச அழைப்பு விடுத்துள்ள சார்லி எப்தோ!
19 கார்த்திகை 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 13126
பிரான்சில் இருந்து வெளிவரும் சார்லி எப்தோ (Charlie Hebdo) பத்திரிகை, சர்வதேச அளவில் கேலிச்சித்திர போட்டி ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி பத்து ஆண்டுகள் நிறைவாக உள்ளதை அடுத்து, இந்த ஓவியப்போட்டியை நடாத்துகின்றது. ‘மதங்களினாலும், கடவுகள்களினாலும் பாதிக்கப்பட்ட அனைவரும் உங்கள் பாதிப்புக்களை ஓவியங்களாக மாற்றி’ அதனை வரைந்து அனுப்புமாறும், #RireDeDieu எனும் குறியீட்டு வார்த்தையினை பயன்படுத்தி அழைப்பு விடுத்துள்ளது.
எந்த நாடு, வயது, மதம் என எந்த கட்டுப்பாடும் இல்லாத ஒரு போட்டியை நடாத்துகிறது. ஓவியங்களை டிசம்பர் 15, மாலை 6 மணிக்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)
2015 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதி, பரிசில் உள்ள சார்லி எப்தோ அலுவலகத்துக்கு ஆயுதத்துடன் வந்த Kouachi சகோதர்கள், சரமாரியாக துப்பாக்கிச்சூடு மேற்கொண்டனர். இதில் 12 பேர் கொல்லப்பட்டிருந்தனர். அதன் 10 ஆவது ஆண்டு நினைவு, ஜனவரி மாத முதல் வாரத்தில் கடைப்பிடிக்கப்பட உள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan