கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய மகிழுந்து! - ஐவர் பலி!
18 கார்த்திகை 2024 திங்கள் 08:57 | பார்வைகள் : 7999
வீதியில் வேகமாக பயணித்த மகிழுந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, மரத்தில் மோதியதில் அதில் பயணித்த ஐவர் பலியாகியுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இச்சம்பவம் தெற்கு நகரான Gaillac (Tarn) இல் இடம்பெற்றுள்ளது. RD 988 வீதியில் பயணித்த மகிழுந்து ஒன்று அதிகாலை 4.30 மணி அளவில் விபத்துக்குள்ளானது. மகிழுந்தில் ஐவர் பயணித்த நிலையில், அவர்களில் நால்வர் சம்பவ இடத்திலேயே பலியானர். ஐந்தாவது நபர் மகிழுந்தில் இருந்து வெளியேற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சில நிமிடங்களில் அவரும் பலியாகியுள்ளார்.
Tarn மாவட்டத்தில் அண்மையில் பல வீதி விபத்துக்களைச் சந்தித்து வருகிறது. இவ்வருடத்தில் இதுவரை 27 பேர் வீதி விபத்தில் பலியாகியுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan