மிஸ். பிரான்ஸ் : உத்தியோகபூர்வ புகைப்படங்கள் வெளியீடு!
18 மார்கழி 2024 புதன் 12:00 | பார்வைகள் : 6547
ஒவ்வொரு ஆண்டும் மிஸ்.பிரான்ஸ் அழகி தேர்தெடுக்கப்பட்டதன் பின்னர், அவர்களுடைய உத்தியோகபூர்வ புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாகும்.
அதேபோல், 2025 ஆம் ஆண்டுக்கான அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Angélique Angarni-Filopon இன் உத்தியோகபூர்வ புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. நான்கு நிற உடைகளில் மொத்தமாக நான்கு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பச்சை, இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் கறுப்பு ஆகிய நிறங்களில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து அவர் காட்சியளிக்கும் இப்புகைப்படங்கள் காப்புரிமை அற்ற புகைப்படமாகும். அவற்றை பொது வெளிகளில் இலவசமாக பயன்படுத்த முடியும்.



பரிசில் உள்ள பிரபலமான உணவகமான Maison Albar - Le Vendome இல் வைத்து இந்த புகைப்படம் கடந்த நவம்பர் 7 ஆம் திகதி படமாக்கப்பட்டுள்ளது. அதன்போது அவர் மிஸ்.பிரான்சாக ஆகவில்லை. பின்னர் டிசம்பர் 14 ஆம் திகதி மிஸ்.பிரான்ஸ் அழகிப்போட்டியின் இறுதிச்சுற்று இடம்பெற்ற போது, பெரும்பான்மையான வாக்கெடுப்பின் மூலம் இந்த கறுப்பு அழகி பிரான்சின் 2025 ஆம் ஆண்டுக்கான அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan