◀▶ புதிய பிரதமர் - François Bayrou !!
13 மார்கழி 2024 வெள்ளி 11:45 | பார்வைகள் : 14957
நாட்டின் புதிய பிரதமராக François Bayrou பொறுப்பேற்றுள்ளார். பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதி மக்ரோனின் அரசாங்கத்தை சுமக்கும் பொறுப்பை அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
செப்டம்பர் 5 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதிவரையான மூன்று மாத காலம் Michel Barnier பிரதமராக செயற்பட்டார். ஐந்தாம் குடியரசில் குறுகிய கால பிரதமர் இவராவார். அவரது அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து,, மீண்டும் புதிய பிரதமராக தற்போது Pau நகரமுதல்வராக உள்ள François Bayrou - பிரதமராக அறிவிக்கப்பட்டார்.
Mouvement démocrate கட்சித்தலைவராக இவர் 73 வயதுடையவராவார். பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் சேவையாற்றியவர். பல்வேறு தடவைகள் ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார்.
இன்று டிசம்பர் 13, வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதியின் எலிசே மாளிகையில் ஒருமணிநேரமும் 45 நிமிடங்களும் சந்திப்பு இடம்பெற்றதை அடுத்து, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சற்று முன்னர் அவரை பிரதமராக அறிவித்ததாக எலிசே மாளிகை அறிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan