சட்டத்தை மீறி - பிரதமர் அலுவலகத்தில் மரம் நட்ட Michel Barnier!
13 மார்கழி 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 13490
பிரதமராக இருந்த மிஷல் பார்னியே சட்டத்தை மீறி பிரதமர் அலுவலகத்தில் மரம் ஒன்றை நட்டுள்ளார்.
நாட்டில் பிரதமராக கடமையாற்றிய அனைவரும் பதவி விலகிச் செல்லும் போது பிரதமர் அலுவலகத்தில் (Matignon) மரம் ஒன்றை நடுவது வழக்கமாகும். அவரது பெயர், ஆட்சிக்காலத்தை குறிப்பிட்டு இந்த மரங்கள் நடப்படும். ஆனால் அதற்கு ஒருவர் பிரதமராக குறைந்தது ஆறு மாதங்கள் பணியாற்றியிருக்கவேண்டும். 1978 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை பிரதமர் அலுவலகத்தில் இருபது மரங்கள் இவ்வாறு நடப்பட்டுள்ளன.
இந்நிலையில், மூன்று மாத காலங்களே பிரதமராக செயற்பட்ட மிஷல் பார்னியே, ’சிவப்பு மாபிள்’ வகை மரம் ஒன்றை நாட்டியுள்ளார். சட்டத்தை மீறி அவர் செயற்பட்டதாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, நாட்டின் புதிய பிரதமர் இன்று காலை அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan