நாடாளுமன்றத்தைக் கலைக்கவேண்டாம் என ஜனாதிபதி கோரிக்கை!!
11 மார்கழி 2024 புதன் 02:51 | பார்வைகள் : 15044
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் மாலை வரை பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்களுடன் எலிசே மாளிகையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தமை அறிந்ததே. அதன்போது நாடாளுமன்றத்தைக் கலைக்க உடன்படவேண்டாம் என ஜனாதிபதி மக்ரோன் கோரியுள்ளார்.
புதிய பிரதமரை நியமிக்கும் பணியில் ஜனாதிபதி மக்ரோன் ஈடுபட்டுள்ளார். பல்வேறு கட்ட அரசியல் சந்திப்புக்கள் எலிசே மாளிகையில் இடம்பெற்று வருகிறது. இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது கலந்துகொண்ட அரசியல் கட்சிகளிடம் '2027 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டாம். அதற்கு உடன்படவும் வேண்டாம்!' எனவும் கோரியுள்ளார்.
புதிய ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தினை உருவாக்க வேண்டிய நெருக்கடியில் அரசாங்கம் இருக்கும் நிலையில், நம்பிக்கை இல்லா பிரேரணை மூலம் அரசாங்கம் மீண்டும் கவிழ்க்கப்படுவதற்குரிய சந்தர்ப்பம் இருப்பதால், அதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என மக்ரோன் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan