Neuilly-sur-Seine - பிரபலங்களின் நகரம்!!
4 மார்கழி 2018 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 25555
Neuilly-sur-Seine - பிரபலங்களின் நகரம்!!
Neuilly-sur-Seine, பரிசின் புறநகர்களில் ஒன்று. இல்-து-பிரான்சுக்குள் இருக்கும் மிக முக்கியமான நகரமும் கூட. ஏன்?? பல காரணங்கள் உண்டு!
பரிசின் புறநகர்களில் மிகவும் செல்வம் கொழிக்கும் நகரமும், 'பணக்கார' நகரமும் இதுவாகும். உலகின் மிக முக்கியமான நிறுவனங்களின் தலைமைச் செயலகமும் இங்கு தான் உண்டு. எப்போதும் செல்வந்தர்கள் போன்று அமைதியாகவே இருக்கும் நகரம்... அதை விடுங்கள்... இங்கு பிறந்த பிரபலங்கள் ஒரு தொகை உண்டு உங்களுக்குத் தெரியுமா?
.jpg)
தற்போதைய இல்-து-பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse இங்கு தான் பிறந்தார். தற்போது பணி நிமிர்த்தம் அவர் பரிசில் வசிக்கிறார்.
தேசிய முன்னணி கட்சியின் தலைவர் மரீன் லூ பென்... அவரும் இங்கு தான் பிறந்தார். தற்போதும் இங்குதான் வசிக்கின்றார்.
பிரெஞ்சு சினிமா நடிகரும் இயக்குனருமான François Truffaut உம் இங்கு தான் பிறந்தார்.
பிரான்சின் முதலாம் பணக்காரர் மற்றும் செல்வந்த பெண்மணியான L'Oréal நிறுவனத்தின் தலைவர் Liliane Henriette Charlotte Bettencourt, இங்குதான் பிறந்தார். நிறுவனத்தின் தலைமைச் செயலகமும் இங்குதான் உண்டு.
பல பதக்கங்களையும், கிண்ணங்களையும் வீட்டில் பதுக்கி வைத்திருக்கும் உதைப்பந்தாட்ட வீரர் Jonathan Bru, அவரும் இங்கு தான் பிறந்தார்.
ஜேம்ப்ஸ் பாண்ட் கதாநாயகி, César இன் சிறந்த நடிகைக்கான விருது பெற்ற Carole Bouquet கூட இங்குதான் பிறந்தார்.
நடிகை, இயக்குனர், எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர் என பல பரிமாணங்கள் கொண்ட Sophie Marceau யும் இந்த நகரில் தான் பிறந்தார்.
அட, சொல்ல மறந்துவிட்டோமே... முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷியும் இங்குதான் பிறந்தார். அட...
இப்படியாக பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது... Neuilly-sur-Seine இன் ராசி அப்படி!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan