பயன்படுத்தப்படாத கடன்களுக்கு முடிவுகட்டும் வரவுசெலவுத்திட்டம்!
22 ஐப்பசி 2024 செவ்வாய் 21:00 | பார்வைகள் : 9204
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் அறிவுக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், சென்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் இருந்து பெரும் தொகை பணத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
2024 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களில் பயன்படுத்தப்படாத அனைத்து தொகையினையும் ‘உறைநிலைக்கு’ கொண்டுசெல்லப்பட்டு, அவற்றை இரத்துச் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட பணத்தினை அரசு மீள பெற்று 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் ‘சேமிப்பில் வரவு வைக்கப்படும் என வரவுசெலவுத்திட்ட அமைச்சர் Laurent Saint-Martin இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இந்த பயன்படுத்தப்படாத திட்டத்தினை இரத்துச் செய்வதன் மூலம் 6 பில்லியன் யூரோக்கள் பணத்தினை சேமிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக சென்ற பெப்ரவரி மாதத்தில் 10 பில்லியன் யூரோக்கள் பெறுமதியான கடன்கள் அரசு இரத்துச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan