Strasbourg அணியை வீழ்த்தியது PSG..! - தரவரிசையில் முதலாம் இடத்தில்..!
20 ஐப்பசி 2024 ஞாயிறு 09:00 | பார்வைகள் : 6717
நேற்று ஒக்டோபர் 19, சனிக்கிழமை
Parc des Princes மைதானத்தில் இடம்பெற்ற 'லீக் 1' சுற்றுப்போட்டியில் Strasbourg மற்றும் PSG அணிகள் மோதின.
இந்த முழுநேர போட்டியில் 4-2 எனும் கோல் கணக்கில் PSG அபாரமாக வெற்றியீட்டியது. போட்டியின் ஆரம்பம் முதலே PSG அணியின் ஆதிக்கம் நிறைந்திருந்தது. முதலாவது கோலினை 18 ஆவது நிமிடத்தில் S. Mayulu (18') பதிவு செய்ய, அடுத்த கோலினை 47 ஆவது நிமிடத்தில் PSG வீரர் M. Asensio (47') விளாசினார்.
பின்னர் 58 ஆவது நிமிடத்தில் Strasbourg அணி சார்பாக S. Mara (58') அவர்களது முதலாவது கோலினை பதிவு செய்தார்கள். இப்பொழுது போட்டி மிகுந்த பரபரப்பாக மாறியது.
பின்னர் B. Barcola (66') , K. Lee (90') ஆகிய இருவரும் இரண்டு கோல்களை அடிக்க, போட்டி PSG பக்கமாக சாய்ந்தது.
இறுதியாக Starsbourg அணிசார்பாக 90+2 நிமிடத்தில் P. D. Diong ஒரு கோல் அடிக்க போட்டி நிறைவுக்கு வந்ந்துள்ளது.
தற்போது, தரப்பட்டியலில் எட்டு போட்டிகளில் 6 வெற்றியுடன் PSG முதலாம் இடத்திலும், அதே வெற்றியுடன் குறைந்த புள்ளிகளுடன் Monaco அணி இரண்டாம் இடத்திலும், ஏழு போட்டிகளில் 4 வெற்றி - 2 சமன், 1 தோல்வி என Marseille அணி மூன்றாம் இடத்திலும், எட்டு போட்டிகளில் நான்கு வெற்றி, இரண்டு சமன், இரண்டு தோல்வியுடன் LOSC அணி நான்காம் இடத்திலும் உள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan