ஐநா தீர்மானத்தில் உருவான நாடு என்பதை இஸ்ரேல் மறக்கக்கூடாது..! - ஜனாதிபதி மக்ரோன்!!
15 ஐப்பசி 2024 செவ்வாய் 16:59 | பார்வைகள் : 15417
ஐநா தீர்மானத்தினால் இஸ்ரேல் எனும் நாடு உருவானது என்பதை நெத்தன்யாஹூ மறக்கக்கூடாது என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இன்று ஒக்டோபர் 15, செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சர்கள் மாநாட்டில் (Conseil des ministres) கலந்துகொண்ட ஜனாதிபதி மக்ரோன், அங்கு வைத்தே இதனை தெரிவித்தார். பாலஸ்தீனத்தை யூத பிராந்தியமாகவும் - அரேபிய பிராந்தியமாகவும் பிரிப்பதற்கு ஐநா சபை 1947 ஆம் ஆண்டு வாக்களித்து ஆதரவளித்தது. இதனை இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹூ (Benjamin Netanyahu) மறக்கக்கூடாது' என மக்ரோன் தெரிவித்தார்.
பிரான்சுக்கும் இஸ்ரேலுக்குமான உறவில் விரிசல் ஏற்படுவதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. போர்க்குற்றம் செய்வதாக தெரிவித்து இஸ்ரேலுக்கு போர் ஆயுதங்கள் வழங்கக்கூடாது என சில நாட்களுக்கு முன்னர் மக்ரோன் உலக நாடுகளிடம் கோரியிருந்தார். இந்நிலையில், இன்று தெரிவித்த இந்தக் கருத்து இரு தரப்பு உறவையும் மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக பல்வேறு சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan