Les Trois 8 - பரிசில் இப்படி ஒரு மதுபான விடுதியா??!

6 மாசி 2020 வியாழன் 12:30 | பார்வைகள் : 22256
மது அருந்துததல் உடல் நலத்திற்கு கேடு எனும் வழக்கமான அறிவித்தலோடு, இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பரிசில் உள்ள வித்தியாசமான மதுபான விடுதி ஒன்று குறித்து பார்க்கலாம்..!!
பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள Les Trois 8 எனும் மதுச்சாலை தான் இது. மிக வித்தியாசமான 'கலெக்ஷன்ஸ்' கொண்டது இந்த மதுச்சாலை.
.jpg)
எப்போதும் ஒரே 'பியரையும், ஒயினையும்' அருந்தி சலித்துவிட்டது... ஏதேனும் வித்தியாசமாக ட்ரை பண்ணலாம் என உங்களுக்குத் தோன்றினால், நேரே இங்கே வந்துவிடுங்கள்.
பரிசில் வேறு எங்கும் கிடைக்காத 100 அரியவகை 'மதுபானம்' இங்கு உள்ளது. கைகளால் தயாரிக்கப்பட்ட மதுபானம், 'ஓர்கானிக்' மதுபானம் என வெரைட்டி வெரைட்டியாக உள்ளது இங்கு.
Northmaen Blonde எனும் ஒரு தினுசான பானம் உள்ளது. (€4.50 ஒரு க்ளாஸ்) அது வேற லெவல் அனுபவம்.
செவ்வாய்க்கிழமை மாலையில் இங்கு ஒரு நிகழ்வு இடம்பெறுகின்றது. இதில் கலந்துகொள்ள உங்களுக்கு சில அடிப்படை தகுதிகள் (??!!)) வேண்டும். அதாவது 'ஸ்டீல்' பாடி வேண்டும்.
உங்கள் கண்களை கட்டிவிட்டு உங்களுக்கு தரப்படும் மதுபானத்தை கப்பென்று அடிக்கவேண்டும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.
இந்த கொண்டாட்டத்திற்காகவே மதுச்சாலையை முற்றுகையிடுகின்றனர் பலர்.
11 rue Victor Letalle
Paris
75020 எனும் முகவரியில் உள்ளது இந்த Les Trois 8 விடுதி. மறுபடியும் சொல்கின்றோம். மது வீட்டுக்கும் நாட்டுக்கும் ஊருக்கும் உலகத்திற்கும் கேடு..!!
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1