வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு - மாகாண முதல்வர் அறிவிப்பு..!!
12 ஐப்பசி 2024 சனி 07:00 | பார்வைகள் : 12970
இல் து பிரான்சுக்குள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்படும் என மாகாண முதல்வர் Valérie Pécresse அறிவித்துள்ளார்.
Kirk புயலினால் Seine-et-Marne, Essonne மற்றும் Yvelines மாவட்டங்களில் வசிக்கும் பலர் பாதிக்கப்பட்டிருந்தனர். வெள்ளத்தினால் கடைகள், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியிருந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால நிதி உதவியாக €1.6 மில்லியன் யூரோக்கள் நிதியினை வழங்குவதாக மாகாண முதல்வர் உறுதியளித்தார்.
நேற்று ஒக்டோபர் 11, Crécy-la-Chapelle நகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், அங்கு வைத்தே இதனைத் தெரிவித்தார்.
"பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மீட்புக்குழுவினர் வேகமாக செயற்பட்டு வருகின்றனர். வீடுகளுக்குள் நுழைந்த வெள்ளத்தை இயந்திரங்கள் மூலம் உறிஞ்சப்படும்!" என உறுதியளித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan