விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம் உடல்நிலை தொடர்பில் வெளியாகிய தகவல்!
10 கார்த்திகை 2024 ஞாயிறு 05:17 | பார்வைகள் : 8402
நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றுள்ளனர்.
குறித்த விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இருவரும் பல மாதமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
இவ்வாறானவொரு நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் உடல் எடை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது என்றும், மன அழுத்தத்தில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்டு வரும் நிலையில் நாசா குறித்த தகவலை மறுத்துள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள அனைத்து விண்வெளி வீரர்களுக்கும் வழக்கமாக மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட அனைவரும் நலமுடன் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan