அகதிகளின் கடற்பயணம்.. முந்தைய ஆண்டு எண்ணிக்கை முறியடிப்பு!!
26 ஐப்பசி 2024 சனி 16:33 | பார்வைகள் : 8000
கடந்த 2023 ஆம் ஆண்டில் கடற்பயணம் மேற்கொண்ட அகதிகளின் எண்ணிக்கையை இந்த 2024 ஆம் ஆண்டு முற்று முழுதாக இரண்டு மாதங்கள் மீதமுள்ள நிலையில் முறியடித்துள்ளது.
நேற்று ஒக்டோபர் 25 வெள்ளிக்கிழமை பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு 424 அகதிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். உயிரிழப்புகள் தொடர்ந்து பதிவாகின்ற போதும், உயிரை பணயம் வைத்து இந்த பயணங்களை அகதிகள் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த ஆண்டில் இதுவரை 29,578 அகதிகள் கடலைக் கடந்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு மொத்தமாகவே 29,437 அகதிகள் பயணித்திருந்தனர்.
இந்த வாரத்தின் ஆரம்பத்தில் மூன்று அகதிகள் கடலில் மூழ்கி பலியாகியிருந்தனர். அவர்களுடன் சேர்த்து மொத்தமாக 45 அகதிகள் இவ்வருடத்தில் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan