வீதி விபத்தில் மூவர் பலி.. மேலும் ஒருவர் காயம்..!!
19 புரட்டாசி 2024 வியாழன் 13:30 | பார்வைகள் : 10652
வீதிக்கரையில் தரித்து நின்ற கனரக வாகனத்துடன் மகிழுந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், மூவர் பலியாகியுள்ளனர்.
இச்சம்பவம் மார்செயின் (Marseille) 15 ஆம் வட்டாரத்தில் நேற்று புதன்கிழமை இரவு 11 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. Chemin du Littoral பகுதியில் A55 நெடுஞ்சாலையில் நால்வருடன் பயணித்த மகிழுந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, 18 தொன் எடையுள்ள கனரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இதில் 20 தொடக்கம் 26 வயதுடைய இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மூவர் பலியாகியுள்ளனர். 20 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. விபத்தை அடுத்து அதிகாலை 4 மணிவரை போக்குவரத்து தடைப்பட்டது.
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan