Louis Vuitton - ஆடம்பர உலகின் ராஜா!
24 புரட்டாசி 2020 வியாழன் 10:30 | பார்வைகள் : 26011
பரிஸ் என்றாலே ஆடம்பரம், அழகு, நவநாகரிகம் தானே. அதற்கு வலுச்சேர்க்கும் பல கம்பெனிகள் இங்கு உள்ளன. Louis Vuitton அவற்றின் ராஜா எனலாம். LV எனும் இரண்டு எழுத்துக்கள் நவநாகரிக உலகில் மிகவும் பிரபலம் மிக்கவை. ஒரு கைப்பையிலோ, இடுப்புப் பட்டியிலோ, கண்ணாடியிலோ இந்த இரண்டு எழுத்துக்கள் தென்பட்டால், போவோர் வருவோர் எல்லோரும் உங்களை ஒரு கணம் திரும்பிப் பார்த்துவிட்டே செல்வார்கள்.
1854 ஆம் ஆண்டில் ‘இறங்குப் பெட்டி’ உற்பத்தியுடன் தனது தொழிலை ஆரம்பித்தார் வித்தன். அதுவரை உலகில் இருந்த இறங்குப் பெட்டிகளைவிட, வித்தன் தயாரித்தது புதுமையாகவும் பயணத்துக்கு கொண்டு செல்ல இலகுவாகவும் இருந்தது. அன்றில் இருந்து புகழ்பெற ஆரம்பித்த கம்பெனி, இன்றுவரை கொடிகட்டிப் பறக்கிறது.
உலகில் 50 நாடுகளில் தனது வியாபாரத்தை கடைகள் போட்டு நடத்தும் இந்தக் கம்பெனியில் 120,000 பேர் வேலை செய்கிறார்கள். ஆடம்பரமான கைப் பைகள், பெல்டுகள், தொப்பிகள், சப்பாத்துக்கள் என்று LV பொறித்த பல பொருட்களை இவர்கள் விற்கிறார்கள்.

விலைகள் என்னமோ ஆயிரம் யூரோக்களில் இருந்துதான் ஆரம்பிக்கும். ஆனால் அதற்கேப தரமும் இருக்கும். பிரெஞ்சு வணிக உலகிலும் நவநாகரிக உலகிலும் Louis Vuitton இனது பெயர் நிரந்தரமாகப் பொறிக்கப்பட்டுள்ளது.

13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan