அவதானம் : தொடருந்தில் பயணம் செய்பவர்களுக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடு.. 150 யூரோக்கள் குற்றப்பணம்!

15 புரட்டாசி 2024 ஞாயிறு 08:00 | பார்வைகள் : 11078
TGV தொடருந்தில் பயணம் செய்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடு ஒன்றை SNCF அறிவித்துள்ளது. 150 யூரோக்கள் வரை குற்றப்பணம் அறவிடப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை தொடருந்துகளில் பயணிப்பவர்கள் தங்களது பயணப்பெட்டிகள் குறித்து கவலைப்பட அவசியம் இல்லாமல் இருந்தது. ஆனால் நாளை முதல் உங்கள் பயணப்பெட்டி 70 X 90 X 50 செ.மீ அளவில் இருத்தல் அவசியமாகும். அந்த அளவில் இரண்டு பெட்டிகளையும் 40 X 30 X 15 செ.மீ அளவில் கைகளில் எடுத்துச் செல்லும் பெட்டியும் இருத்தல் வேண்டும்.
அப்பெட்டிகளின் எடை குறித்து கவலைப்படத்தேவையில்லை. அதற்கு எந்த அளவும் இல்லை. மேற்குறித்த பெட்டியின் அளவை மீறி பயணப்பெட்டியை எடுத்துச் செல்வது அறியப்பட்டால் முதல் தடவையாக 50 யூரோக்கள் குற்றப்பணமும், இரண்டாம் முறை அதே தவறைச் செய்தால் 150 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த கட்டுப்பாட்டில் சில விதிவிலக்கும் உண்டு. குழைந்தைகளின் தள்ளுவண்டி (poussette) , இரண்டாக மடிக்கக்கூடிய ஸ்கூட்டர்கள் (trottinette) மற்றும் இசைக்கருவிகள் கொண்டுசெல்ல முடியும். அதற்கு எந்த அளவீடுகளும், தடையும் இல்லை.
இந்த சட்டம், நாளை செப்டம்பர் 16, திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1