செப்டம்பர் 14 "தேசிய விளையாட்டு தினம்" Emmanuel Macron.
14 புரட்டாசி 2024 சனி 07:56 | பார்வைகள் : 12354
எப்படி பிரான்ஸ் தேசம் 1982ல் ஜுன் 21ம் திகதியன்று 'இசைத் திருவிழா' (Fête de la musique ) என அறிவித்து கொண்டாடத் தொடங்கியதில் இருந்து இப்போது உலகமெல்லாம் கொண்டாடுகிறதோ அதே போல் செப்டம்பர் 14ம் திகதியன்று தேசிய விளையாட்டு தினமாக கொண்டாட வேண்டும் என அரசதலைவர் Emmanuel Macron விருப்பம் தெரிவித்துள்ளார்.
"அன்றைய நாளில் எங்கள் நகரங்களில், எங்கள் கிராமங்களில், எங்கள் சுற்றுப்புறங்களில், பூங்காக்களில், விளையாட்டு மைதானங்களில் இளம் வயதினரும் முதியவர்களும் என சகலரும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள்,போட்டிகள் விளையாட்டுகள் என நடத்தி பிரஞ்சு மக்களை உடல் பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும்" என அரசதலைவர் Emmanuel Macron பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியல் தெரிவித்துள்ளார்.
"மிகப்பெரும் பிரம்மாண்டமான ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி முடித்த ஒரு நாடு உடற்பயிற்சியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்குவதே பொருத்தமானது என்றும் இன்றைய காலகட்டத்தில் இளையோர் முதல் முதியோர் வரை உடல் அசைவுகளை மேற்கொள்ளாமல் உடல் அசைவுகள் அற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan