மதுபோதையில் மகிழுந்து செலுத்திய பாடகர்.. ஒருவர் பலி..!
12 புரட்டாசி 2024 வியாழன் 11:24 | பார்வைகள் : 16671
சொல்லிசை பாடகர் (rappeur) Koba LaD, மதுபோதையில் மகிழுந்தைச் செலுத்தி விபத்துக்குள்ளானார். அவருடன் மகிழுந்தில் பயணித்த ஒருவர் பலியாகியுள்ளார்.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் Créteil நகரில் இடம்பெற்றுள்ளது. 24 வயதுடைய குறித்த பாடகர், மதுபோதையில் தனது நண்பர் ஒருவரை ஏற்றிக்கொண்டு வேகமாக பயணித்துள்ளார். எதிரே சென்றுகொண்டிருந்த கனரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார்.
இச்சம்பவத்தில் அவரது நண்பர் பலியாகியுள்ளார். அவர் 1999 ஆம் ஆண்டு பிறந்த 25 வயதுடைய நண்பர் என தெரிவிக்கப்படுகிறது.
விபத்தை ஏற்படுத்திய பாடகர் Koba LaD, முன்னதாக 2020 ஆம் ஆண்டிலும் விபத்தொன்றை ஏற்படுத்தியிருந்த குற்றத்துக்காக மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan