Stains : கத்திக்குத்து... இருவர் கைது..!
5 ஐப்பசி 2024 சனி 07:00 | பார்வைகள் : 8959
தலையில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதல் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Stains (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (ஒக்டோபர் 3) இடம்பெற்றுள்ளது. rue Joséphine-Baker வீதியில் வைத்து மாலை 6 மணி அளவில் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு அவர்கள் சென்றடைந்த போது, நபர் ஒருவர் தலையில் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த நிலையில் இருந்துள்ளார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
தாக்குதலாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ள நிலையில், சிலமணிநேரம் கழித்து அந்நகர காவல்நிலையத்துக்கு பெண் ஒருவர் வருகை தந்துள்ளார். அவரது மகனே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். அதை அடுத்து அப்பெண்ணின் வீட்டுக்கு விரைந்து சென்று தாக்குதலாளியை கைது செய்தனர். பின்னர் இரண்டாவது நபர் ஒருவரையும் சில நிமிடங்களின் பின்னர் கைது செய்தனர்.
தாக்குதல் இடம்பெற்றதற்குரிய காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan