வீதி விபத்து... பாதசாரிகள் அதிகளவில் பாதிப்பு..!!

3 ஐப்பசி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 8637
இல் து பிரான்சில் - வீதி விபத்துக்களில் பாதசாரிகளே அதிகளவில் பாதிக்கப்படுகின்றார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு 14 நாட்களுக்கும் ஒரு பாதசாரி உயிரிழப்பதாகவும், இவ்வருடத்தின் ஜனவரி-ஜூலை வரையான மாதங்களில் இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சென்ற ஆண்டில் இதே காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்களை விட நால்வர் அதிகமாகும்.
இதே காலப்பகுதியில் 2,430 விபத்துக்கள் இல் து பிரான்சுக்குள் இடம்பெற்றதாகவும், 2,709 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணங்களில் முதல் இடத்தில் இருப்பது போதைப்பொருள் உட்கொண்டுவிட்டு வாகனங்கள் ஓட்டுவதேயாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1