விபத்துக்குள்ளான பாடசாலை பேருந்து.. 15 மாணவர்கள் காயம்!
24 புரட்டாசி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 19162
நேற்று செப்டம்பர் 23, திங்கட்கிழமை பாடசாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 வரையான மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
Meaux (Seine-et-Marne) நகரில் இச்சம்பவம் பிற்பகல் 4 மணி அளவில் இடம்பெற்றது. பாடசாலைமாணவர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணித்த 12 தொடக்கம் 14 வயதுடைய பதினைந்து மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும், ஏனைய 39 பேர் காயங்களின்றி தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக தீயணைப்பு படையினர் களமிறங்கி, மாணவர்களை மீட்டனர். பலர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து சாரதிக்கு மதுபோதை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மது அருந்தியிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan