ஆபத்தான படகுப்பயணம்.. 98 பேர் மீட்பு!
13 ஆவணி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 16466
பா-து-கலேயில் இருந்து ஆங்கிலக்கால்வாய் ஊடாக பிரித்தானியா நோக்கி சட்டவிரோத பயணம் மேற்கொண்ட 98 பேர் தடுத்து நிறுத்தப்பட்டு கரைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
நேற்று ஓகஸ்ட் 12, திங்கட்கிழமை அதிகாலை இரு வேறு படகுகளில் அகதிகள் பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளனர். முதலாவது படகில் 66 பேர் பயணித்துள்ள நிலையில் - கடற்பயணங்களை கண்காணிக்கும் CROSS எனும் அமைப்பினர் அவர்களைக் கண்டறிந்து கடலில் இருந்து மீட்டனர். பின்னர் சில நிமிடங்கள் கழித்து 32 பேருடன் பயணித்த மற்றுமொரு படகினை தடுத்து நிறுத்தினர்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியா நோக்கி 11 படகுகளில் 700 அகதிகள் பிரித்தானியா நோக்கி பயணித்திருந்ததாகவும், அதில் இருவர் பலியானதாகவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan