நான் செய்ன் நதியில் இறங்கமாட்டேன் - கலாச்சார அமைச்சர்!!
5 ஆவணி 2024 திங்கள் 17:02 | பார்வைகள் : 18883
பிரான்சின் காலாவதியாகும் அரசின், கலாச்சார அமைச்சர் ரசிதா தாத்தி (RACHIDA DATI) ஒரு தொலைக்காட்சிச் செவ்வியில், எக்காரணம் கொண்டும் செய்ன் நதியில் நீந்தமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
செய்ன் நதி நீர்ச் சுத்திகரிப்பிற்காக வழங்கப்பட்ட நிதிபற்றி வினவியபோது,
«செய்ன் நதி, பெரும் நீரோட்டம் உள்ள நதியாகும். இதன் சுத்திகரிப்பில் எனக்கு முழுத் திருப்பதி இல்லை. நான் நதியில் நீந்தவோ, இறங்கவோ மாட்டேன்»
எனத் தெரிவித்துள்ளார்.
செய்ன் நதியில் போட்டியில் பங்கேற்ற பெல்ஜிய வீராங்கனையின் சுகவீனமும், கலாச்சார அமைச்சரின் பிரகடணமும் செய்ன் நதிப் போட்டிகளை கேள்விக்குறியாக்கி உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan