பரிஸ் : காவல்துறை வீரரைத் தாக்கி - துப்பாக்கி பறிப்பு.. நால்வர் கைது..!!
5 ஆவணி 2024 திங்கள் 12:34 | பார்வைகள் : 17871
காவல்துறை வீரர் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிந்த நால்வர் கொண்ட குழுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று ஓகஸ்ட் 4, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் பரிசின் 4 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. Quai des Célestins பகுதியில் நள்ளிரவு 2 மணி அளவில் காவல்துறை வீரர் ஒருவர் சிவில் உடையில் இருந்துள்ளார். அவரை சுற்றி வளைத்த ஐந்து தொடக்கம் ஆறு பேர் கொண்ட குழு, அவரைத் தாக்கியுள்ளனர்.
பின்னர் அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிந்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர். அதற்குள்ளாக மேலதிக காவல்துறையினர் அழைக்கப்பட்டு, தாக்குதலாளிகள் கைது செய்யப்பட்டனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan