பரிஸ் : காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற மகிழுந்து... மருத்துவமனையில் சாரதி..!!
3 புரட்டாசி 2024 செவ்வாய் 21:00 | பார்வைகள் : 9250
காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற மகிழுந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று செப்டம்பர் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. Avenue de Suffren (பரிஸ் 7 ஆம் வட்டாரம்) பகுதியில் கண்காணிபில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக பயணித்த மகிழுந்து, சில நிமிடங்களிலேயே வீதியின் அருகே உள்ள கொன்கிரீட் தடுப்புச் சுவற்றில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்தில் பாதசாரி ஒருவரும், காவல்துறை வீரர் ஒருவரும் இலேசான காயங்களுக்கு உள்ளாகினர்.
சாரதி கைது செய்யப்பட்டதுடன், கண்காணிப்பின் கீழ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan