Paristamil Navigation Paristamil advert login

ஈஃபிள் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒலிம்பிக் வளையங்கள் இடமாற்றம்..!

ஈஃபிள் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒலிம்பிக் வளையங்கள் இடமாற்றம்..!

3 புரட்டாசி 2024 செவ்வாய் 16:54 | பார்வைகள் : 17581


ஈஃபிள் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒலிம்பிக் வளையங்கள், அங்கு நிரந்தமாக அமைக்கப்படுமா என்பது தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளன.

ஆனால் இந்த கேள்விக்கு பதில் கிடைக்கும் முன்னர், தற்காலிகமாக அந்த வளையங்கள் Iéna மேம்பாலத்துக்கு (Pont d'Iéna) மாற்றப்பட உள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தவுடன் அந்த வளையங்கள் அகற்றப்படவேண்டும் எனும் நிபந்தனையுடனே ஈஃபிள் கோபுரத்தில் அது அமைக்கப்பட்டது. வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி பரா ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடையும் போது இந்த வளையங்களும் அகற்றப்பட உள்ளன.

அங்கிருந்து அகற்றப்படும் வளையங்கள் Pont d'Iéna மேம்பாலத்தில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. மீண்டும் ஈஃபிள் கோபுரத்துக்கு அது கொண்டுசெல்லப்படுமா எனும் கேள்விக்கு தற்போது வரை பதிலில்லை!

வர்த்தக‌ விளம்பரங்கள்