பிரான்சின் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். Jordan Bardella,
30 ஆவணி 2024 வெள்ளி 08:03 | பார்வைகள் : 15178
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் Rassemblement national (RN) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவரான Jordan Bardella அவர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள காணொளி மூலம் அரசதலைவர் Emmanuel Macron அவர்களுக்கு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
"நாட்டின் பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாக மாறிவருகிறது யூதர்களின் வழிபாட்டு தளமான Grande-Motte மீது பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளது, அதேபோல் வீதிப் பாதுகாப்பில் ஈடுபட்ட gendarme பாதுகாப்பு அதிகாரி Alpes-Maritimes பகுதியில் வாகன சாரதி ஒருவரால் அத்துமீறி மோதுண்டு கொல்லப்பட்டுள்ளார். 46 நாட்களைக் கடந்தும் அரசாங்கம் இல்லாத நாடாக பிரான்ஸ் இருக்கிறது இந்த நிலையில் ஒரு பெரும் விவாதத்தை நாடாளுமன்றத்தில் Emmanuel Macron அவர்கள் நடத்த வேண்டும் " என அந்த காணொளியில் Jordan Bardella அவர்கள் கூறியுள்ளார்.
புதிய பிரதமரை தெரிவு செய்வது, புதிய நாடாளுமன்றம் அமைப்பது குறித்து கடந்த வாரம் அரசதலைவர் Emmanuel Macron அவர்கள் தலைவர் மாளிகையில் நடத்திய சந்திப்புக்களின் போது அதில் கலந்து கொண்ட Jordan Bardella மற்றும் Marine le Pen ஆகிய இருவரும் Nouveau Front populaire கட்சியினர் Lucie Castets தலைமையில் அரசமைத்தால் நம்பிக்கை இல்லா பேரணியை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து அவர்களுடைய ஆட்சி கவிழ்ப்போம் என தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan